இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

கேகாலை, புளத்கொஹூப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கொட பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலத்தை புளத்கொஹூப்பிட்டிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹிக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புளத்கொஹூப்பிட்டிய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.