விதாதா வள நிலையத்தின் தொழில்நுட்ப உதவிக் கள நிகழ்ச்சி!
பிரம்புகள், பித்தளை, மட்பாண்டம், தளபாடங்கள் மற்றும் கிராமியக்கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக விதாதா வளநிலையத்தினரின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப உதவிக் கள நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவாகளின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(23) காலை 9.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சிறுதொழில் முயற்சியாளர்களிற்கான அனைத்துவிதமான சேவைகளின் விளக்கங்களை ஓரிடத்தில் பெறக்கூடியதாக குறித்த நிகழ்ச்சித்தட்டம் அமைந்திருந்தது.
இதன்போது கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்(ITI), தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்NERD Center), இலங்கை கட்டளைகள் நிறுவனம்(SLSI), கைத்தொழில் அபிவிருத்தி சபை(IDB), தேசிய அருங்கலைகள் பேரவை(NCC), இலங்கை ஏற்றுமதிச் சபை(EDB) ஆகிய நிறுவனங்களின் சேவைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முழுநேரமாக இடம்பெற்ற இச் செயலமர்வில் கலந்துகொண்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் துறைசார் அதிகாரிகளிடம் தமக்கான சேவைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவன தலைமை விஞ்ஞானி கலாநிதி எஸ்.பிரபாகர், தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன பொறியியலாளர் கே.சிவசுதன், இலங்கை கட்டளைகள் நிறுவன தொழில்நுட்ப உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ. மொகமட் சப்றி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பி.ரமணன், தேசிய அருங்கலைகள் பேரவை வடமாகாண விரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.சசிகரன், இலங்கை ஏற்றுமதிச் சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் கே.கனோஜன், விதாதா வள நிலைய மாவட்ட உத்தியோகத்தர் ம.தவேந்திரன் மற்றும் உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளாகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.