முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணிகள் மீள ஆரம்பம்!

கொவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது நவம்பர் 25ம் திகதியிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றதென முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் அவர்கள் அறியத்தந்துள்ளார்.
இருப்பினும் சாரதி அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதியிலிருந்து இடம்பெறும் என்பதுடன, அனைத்து சேவைகளும் கட்டாயமாக 021 2117116 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரத்தினை முற்பதிவு செய்தபின் வருகைதர வேண்டுமென அறியத்தந்துள்ளார்.
மேலும் திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்யாது வருகைதரும் சேவைபெறுநர்களுக்கான சேவையை வழங்குவதற்கு இயலாதநிலை ஏற்படுமெனவும் அறியத்தந்துள்ளார்.