புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை எச்சரிக்கை
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பிற நோய்கள் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா வந்து அவர் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரில் உடலில் இந்த புதிய வகை கொரோனா வகை உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த நாடுகளில் இருந்து இந்தியாவரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இநிலையில், தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 739 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,23,245 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து நேற்று 764 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,78,371 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 8,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 107 பேருக்கும் கோயம்புத்தூரில் 112 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர்.