கொரோனா ‘தலைநகராக’ மாறிய மருத்துவ கல்லூரி; தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு
கர்நாடக தார்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனிடையே, அந்த கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அந்த கல்லூரியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதன் பின்னரே சில மாணவர்களிக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும் 400 மாணவர்களில் 300 பேருக்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில், 66 மாணவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதன் எண்ணிக்கை 182ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான முதல் 66 மாணவர்களும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரியில் உள்ள 2 விடுதிகளுக்குச் சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா காரணமாக பரவல் அதிகரித்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள பாதிக்கப்பட்டவர்களின் மாதிரி, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதால் அவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் தடுப்பூசி செலுத்து கொண்ட மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.