ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மீது பயணத் தடை.
ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தென் ஆப்பிரிக்கா மீது பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் மிகவும் ஆபத்தான புதிய வகை கோவிட்-19 வைரஸ் பரவிவருவைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.1529 என அழைக்கப்படும் இந்த வைரஸ், முந்தைய மாறுபாடுகளில் இருந்து மாறுபட்டவை என்று கூறப்படுகிறது.
ஏனெனில், இவை உடலின் நோயெதிர்ப்பு திறனை தவிர்த்து, அதிகம் பரவக்கூடியதாக இருக்கும் என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 32 பிறழ்வுகள் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
ஜேர்மனியில் ஏற்கெனெவே 4-வது அலையின் தாக்கத்தால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் தென் ஆப்பிரிக்காவை ‘virus variant area’ என அறிவிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக பயணத் தடை அறிவிக்கப்படவுள்ளது என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.
இந்த அறிவிவிப்பானது இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு முதல், தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜேர்மன் குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டில் அனுமதிக்கப்படுவர்.
அப்படி வரும் பட்சத்தில், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருந்தாலும், அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாறுபாடு எங்களை கவலையடையச் செய்கிறது. அதனால்தான் நாங்கள் ஆரம்பத்திலேயே சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்” என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.
முன்னதாக, பிரித்தானிய அரசாங்கம் தென் ஆப்பிரிக்கா உட்பட அதனைச் சுற்றி உள்ள மொத்தம் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயந்த தடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.