வெடிபொருட்களுடன் ஒருவர் சிக்கினார்!
தம்புள்ளையில் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகொல்ல பிரதேசத்தில் தம்புள்ளைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அனுமதிப் பத்திரமின்றி 8 கிராம் 710 மில்லிகிராம் அமோனியா, 9 வோட்டர்
ஜெல் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 46 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.