லிட்டன், முஷ்பிக்கூர் அதிரடி; வங்கதேசம் 253/4.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் தலா 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த கேப்டன் மொமினுல் ஹக்கும் 6 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் – லிட்டன் தாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் லிட்டன் தாஸ் சதமடித்து அசத்த, அவருக்கு துணையாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹீமும் அரைசதம் கடந்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. இதில் லிட்டன் தாஸ் 113 ரன்களுடனும். முஷ்பிக்கூர் ரஹீம் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.