பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விசேட விடுமுறை தினங்கள் அறிவிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டிசம்பா் 23, 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் 27ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.