முதல் போட்டி மழையால் ரத்தானது.
தென் அப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெர்ரெயின், பெஹ்லுக்வாயோ ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது.
இதில் வெர்ரெயின் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இறுதியில் அதிரடியாக விளையாடிய பெஹ்லுக்வாயோ 6 சிக்சர்களை விளாசி 48 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் – ஸ்டீபன் மைபர்க் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இரண்டு ஓவர்கள் முடிவில் திடீரென மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டி முடிவின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.