“ஜவாத்” என்று பெயரில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்று சர்வதேச வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற்றம் பெற்றால், “ஜவாத்” என்று பெயரிடப்படும் என்றும் சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூறாவளி உருவானால் அடுத்த வாரம் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் கன மழை வீழ்ச்சி காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்துவரும் மழையால் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதேநேரம் நீர் நிலைகளில் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.