கொவிட் அறக்கட்டளைக்கு அரச ஈட்டு, முதலீட்டு வங்கியிடமிருந்து 5 மில்லியன் ரூபாய் நன்கொடை

அரச ஈட்டு, முதலீட்டு வங்கியினால், “செய்கடமை – COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இதற்கான காசோலை, அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் பதில் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லுஷாந்த ரணசிங்க அவர்களினால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார அவர்களிடம் நேற்று (26) முற்பகல் கையளிக்கப்பட்டது.
அரச ஈட்டு, முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் சிலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.