மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமரினால் “பேராசிரியர்” தரமுயர்வு.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் ‘மருத்துவ பேராசிரியர்’ என்ற தரமுயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வின் போதே – இந்த ‘மருத்துவ பேராசிரியர்’ தரமுயர்வு வழங்கிவைக்கப்பட்டது.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்களான –
டப்ளிவ். ஐ. அமரசிங்க,
எரந்தி சமரகோன்,
எம். சதானந்தன்,
எஸ். எல். எஃப். அக்பர், எஸ். கே. ரணராஜா,
சனத் லென்ரோல்,
எஸ். பீ. ஏகநாயக்க,
கௌரி செந்தில்நாதன்,
எஸ். ஷிவசுமித்ரன்,
ராணி சீதாம்பபிள்ளே,
தர்ஷன டி சில்வா,
எம். என். ஜிஃப்ரி,
டி. கடோட்கஜன்,
கிரிஷான் சில்வா,
நிஷேந்திர கருணாரத்ன,
எச். எம். ஜே. என். ஹேரத்
ஆகியோர் இவ்வாறு தமது “மருத்துவ பேராசிரியர்’ சான்றிதழ்களைப் பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா அவர்கள் அற்கான அழைப்பை பிரதமருக்கு விடுத்துருந்தார்.
இந்த நிகழ்வின் பொது – பேராசிரியர் டீ. ஏ. ரணசிங்க நினைவுரையை, பேராசிரியர் எஸ். எச் தொடம்பஹல அவர்கள் நிகழ்த்தினார்.
மேற்படி நிகழ்வில் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் டப்ளிவ். ஐ. அமரசிங்க, தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.