மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நீடித்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நீடித்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட இலங்கை-பாக்நீர் இணைப்பு-மன்னார் வளைகுடா பகுதியில் நீடிக்கிறது. இத்தாழ்வு பகுதியுடன் இணைந்த தாழ்வு நிலை குமரிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதி வரை நீடிக்கிறது.
வானிலை எதிர்ப்பார்ப்பு:
இந்த நான்காம் சுற்று மழை நவம்பர் 30 இரவு வரை நீடிக்கும், டிசம்பர் 1ம் தேதி அதிகாலை முதல் படிப்படியாக குறைய துவங்கும்.. அடுத்த 2 தினங்களில் அனைத்து மாவட்டங்களுக்கு பரவலாக நல்ல மழையை கொடுக்கும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிககனமழையும், ஒரிரு இடங்களில் அதித கனமழையும் பதிவாகும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கான எதிர்ப்பார்ப்பு:
நவம்பர் 29 (நாளை) காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை எதிர்ப்பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
இந்த சுற்று மழையில், தொடர் கனமழையாக 24 மணி நேரமும் அடைத்து பெய்யாது, இடைவெளி விட்டு விட்டு தான் பெய்யும்.பெய்யும் குறுகிய நேரத்தில் வலுத்து கனமழையாக பெய்யும்.இடைவெளியின் போது தெளிவான வானத்துடன் சூரியன் காணப்படவும் வாய்ப்பு இருக்கும்.அதேபோல் மழையின் போது பலத்த இடி,மின்னல் காணப்படும். தரைக்காற்றின் வேகம் இயல்புக்கு மாறாக அவ்வப்போது அதிகரித்து காணப்படும் இதனால் எந்த பதிப்பும் ஏற்படாது.