எவரேனும் வெளியேறத் தடையில்லை! உள்நுழைய ஒரு குழு தயார்! ‘மொட்டு’ அரசு அதிரடி

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்தத் தடையும் இல்லை.”
– இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசிலிருந்து எவரேனும் வெளியேறினால் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழுவினர் அரசுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.
அரசிலிருந்து எந்த அணியேனும் வெளியேறினாலும் இந்த அரசு தனது மூன்றில் இரண்டு அதிகாரத்தை இழக்காது. அந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பது அரசுக்குத் தெரியும்.
அரசுக்குள் இருந்துகொண்டு சிலர் விடுக்கும் மிரட்டல்களைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கின்றது” – என்றார்.