வானொன்றில் வெடிபொருட்களுடன் பயணித்த ஐவர் பொலிஸாரால் கைது.
அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை வானொன்றில் கொண்டு சென்ற ஐவரைப் பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
அனுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரியதாசகம, பதவிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வெடிபொருட்களுடன் குறித்த வான் சிக்கியுள்ளது.
53 கிலோகிராம் நைய்ட்ரேட், 2 ஆயிரத்து 192 அடி நூல், 178 ஜெலட்னைட் குச்சிகள், 320 டெட்டனேட்டர்கள், 01 கயிறு, 01 இரும்பு மற்றும் இயந்திரம் என்பவற்றுடன் வானில் இருந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி, கெக்கிராவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29 – 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.