ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
கொரொனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல மீண்டும் வந்த நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளை கதி கலங்கை வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த கொரோனா, டெல்டா வகை கொரோனாவை விட வீரியம் மிக்கதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஒமிக்ரான் கொரோனா வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:- ஒமிக்ரா வேரியண்ட் , மிக அதிகமான உலகளாவிய அபாயமாக தோன்றுகிறது. பாதிப்பு அதிகமாகும் இடங்களில் மிக அதிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனினும், இந்த வகை கொரொனா எந்த அளவு கொடியது மற்றும் அபாயகரமானது என்பதை இன்னும் கண்டறியப்படவில்லை. ஒமிக்ரான் கொரோனா சர்வதேச அளவில் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.