முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கடந்த 25.11.2021ம் திகதி வியாழக்கிழமை மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் முழுமையாக முடக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உடல் உள ரீதியில் எதிர் கொண்ட பிரச்சினைகளை பாடசாலை மற்றும் கிராம மட்டத்தில் சீர்செய்வதற்கான தயார்ப்படுத்தலை ஏற்படுத்தவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கடந்த கால கூட்டக் குறிப்பின் முன்னேற்பாடுகள், பாடசாலை இடைவிலகல், பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொடுத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், அறநெறி வகுப்புக்கள். சுகாதாரம், போசனை, போதைப் பொருள், சிறவர் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.