தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கான களவிஜயம்!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டி 2020க்கான தொலைநிலை(Zoom) மதிப்பீட்டுத் தேர்வில் களவிஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணைப் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பெற்றுள்ளது.
இந் நிலையில் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கான மதிப்பீட்டுப் பணிக்கான களவிஜயம் கடந்த 25.11.2021ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திலிந்து வரகைதந்த மதிப்பீட்டுக் குழுவினர் மாவட்ட செயலகத்திலள்ள ஒவ்வொரு கிளைகளையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்தமுறை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியில் அரச பிரிவில் விண்ணப்பித்து மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.