நாட்டில் மின் வெட்டு ஏற்படும் – ரணில். மின் வெட்டு ஏற்படாது -கம்மன்பில !
நாட்டில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் அந்நியச் செலாவணி நிலவரத்தைப் பொறுத்தே நாட்டின் எரிசக்தி தங்கியிருப்பதாகவும், அந்நியச் செலாவணி குறைக்கப்பட்டால் மின்வெட்டு ஏற்படக் கூடும் என்றும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு 1.5 பில்லியன் டொலர் என்றும், அதில் 300 மில்லியன் டொலர் தங்கம் மற்றும் 1.2 பில்லியன் டொலர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர், நீர் மின் உற்பத்தி 55 வீதமாக அதிகரித்துள்ளதால் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் இன்னும் 40 நாட்களுக்கு கிடைக்கும் எனவும் அதனால் மின்வெட்டு ஏற்படாது எனவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.