பேசாலை புனித வெற்றி அன்னை பங்கின் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.
மன்னார் மறைமாவட்டத்தின் முதுமையான பேசாலை பங்கின் பாதுகாவளியாம் புனித வெற்றி அன்னை ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் 08.12.2021 நடைபெறுவதையிட்டு திங்கள் கிழமை (29.11.2021) கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது.
மன்னாரில் பெய்துவரும் மழையினால் பேசாலை பகுதியானது எங்கும் வெள்ளக்காடுகளாக காட்சி அளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ் ஆலய வளாகமும் வெள்ள நீரால் சூழ்ந்திருக்கும் நிலையிலேயே இவ் கொடியேற்றம் இடம்பெற்றது.
பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் புனித வெற்றி அன்னை மற்றும் பாப்பரசர் திருக்கொடிகளையும் ஏற்றிவைத்து இவ் பெருவிழாவுக்கான நவநாட்களை தொடக்கி வைத்தார்.
வழமையாக இவ் விழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றபோதும் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டும் மற்றும் வீதிகள் வீடுகளில் பெரும் வெள்ளம் இப்பகுதியில் காணப்படுவதால் பக்தர்கள் வெகு குறைவாகவே காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.