சுகாதார அமைச்சின் முக்கிய செய்தி….
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர் 6 மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை, கடந்த 26ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸைப் பெற்ற பிறகு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாதவர்கள், இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்களுக்குப் பின், மூன்றாவது டோஸைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக, பைசர் தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் 27ம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த தடுப்பூசி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.