எங்கள் வீரர்கள் ஆடிய விதம் நம்பிக்கையை அளிக்கிறது- கேன் வில்லியம்சன்.
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம், வில்லியம், கேப்டன் கேன் வில்லியம்சன் தவிற மற்ற பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இந்திய அணி வெற்றிப்பாதைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், அஜாஸ் படேல் மற்றும் ரவீந்திரன் இருவரும் இணைந்து தோல்வியின் விளிம்பில் இருந்த நியூசிலாந்து அணியை காப்பாற்றினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி 12 ஓவர்களை திறம்பட சமாளித்த அவர்களின் ஆட்டம் நியூசிலாந்துக்கு புது நம்பிக்கையை அளித்தது.
போட்டி முடிந்தபிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், “ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் மிகவும் எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தது. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம். ஒட்டுமொத்தமாக சிறப்பான ஆட்டமாக அமைந்தது. கடைசி கட்டத்தில் ரச்சின் மற்றும் அஜாஸ் பட்டேல் இருவரும் காட்டிய மனநிலை, அணியை சரிவில் இருந்து மீட்டிருக்கிறது. அதேபோல் துவக்கத்தில் ஷோமர்வில் ஆடிய விதமும் மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கிறது.