ஒமிக்ரான் கொரோனா மாறுபாட்டின் வீரியம் தொடர்பில் முக்கிய தகவல்.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு, தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஜேர்மனி, கனடா, ஸ்பெயின் நாடுகளுக்கும் பரவியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதற்கிடையில், ஒமைக்ரானை மிகவும் கவலைக்குரிய மாறுபாடு என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒமைக்ரான் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்காததால் இது ஒரு ‘சூப்பர் மைல்ட்’ மாறுாபடாக தோன்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
WHO மற்றும் கொரோனா வைரஸ் நிபுணர்கள், புதிய ஒமைக்ரான் மாறுபாடு ‘சூப்பர் மைல்ட்’ வீரியம் கொண்டது என்று பெருமளவில் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.