அமெரிக்காவிலும் ஓமைக்ரான் வைர்ஸ் நுழைந்தது.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில், உலகை அச்சுறுத்தி வருகிற ஒமைக்ரான் வைரஸ், அமெரிக்காவிலும் நுழைந்து விட்டது. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை.
“பாதிக்கப்பட்ட நபர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டார் மற்றும் லேசான அறிகுறிகளை இருப்பதையே தெரிவித்தார் என டாக்டர் ஃபாசி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஒமைக்ரான் இன் முதல் வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில், கோவிட் ஜாப்ஸ் மற்றும் பூஸ்டர்களைப் போட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க மக்களை வலியுறுத்தி உள்ளது.