சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும்…..

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் வழங்குதல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் இலங்கை பணம் அனுப்புவதற்காக சட்டரீதியான வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்.