லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் தொலைபேசி இலக்கம் அறிமுகம்….

அவசர சந்தர்ப்பங்களில் தொடர்புகொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் நுகர்வோருக்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1311 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிறுவனத்தால் நுகர்வோருக்கு புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.