முதல்முறையாக ட்ரோன் விமானம் ஒன்றை தென்கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
நகர்ப்புற விமானப் போக்குவரத்து சேவைக்காக முதல்முறையாக ட்ரோன் விமானம் ஒன்றை தென்கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் கொரிய நாட்டில் சியோலில் உள்ள ஒரு விமான நிலையத்தில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ட்ரோன் விமானம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்படி, மின்சாரத்தின் மூலமாக இயங்கும் இந்த ட்ரோன் விமானம் புறப்பட்டபடியே செங்குத்தாக வந்து தரையிறங்கியது. வருங்காலத்தில் இதனை தரைவழிப் போக்குவரத்தில் இணைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தென் கொரியா 2025 ஆம் ஆண்டில் முதல் நகர்ப்புற விமான போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.