ஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

கடந்த சில மாதங்களாக நாட்டில் கொரோனா பாதிப்புகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டு வரும் நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகளை டிசம்பர் 15-ம் தேதி முதல் துவக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் (omicron) தீவிரமாக பரவுவதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான விமான பயணிகளுக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.

இந்த புதிய பயண வழிகாட்டுதல்கள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. தீவிர தொற்றாக குறிப்பிடப்படும் ஒமைக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றோருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

RT-PCR சோதனையின் கட்டாய நெகட்டிவ் ரிப்போர்ட்..

அனைத்து சர்வதேச பயணிகளும் தங்களது 14 நாட்கள் பயண வரலாற்றை (travel history) சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஏர் சுவிதா போர்ட்டலில் நெகட்டிவ் கோவிட் டெஸ்ட் ரிசல்ட்டை அப்லோட் வேண்டும். இந்த புதிய பயண வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வேரியன்ட் கண்டறியப்படவில்லை.

ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் புதிய கோவிட் வேரியன்டான Omicron பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல இந்தியா வந்தவுடன் நடத்தப்பட்ட RT-PCR சோதனையின் கட்டாய எதிர்மறை அறிக்கை தேவைப்படும். அனைத்து சர்வதேச பயணிகளும் தங்களது 14 நாட்கள் பயண வரலாற்றை (travel history) சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஏர் சுவிதா போர்ட்டலில் நெகட்டிவ் கோவிட் டெஸ்ட் ரிசல்ட்டை அப்லோட் வேண்டும். இந்த புதிய பயண வழிகாட்டுதல்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

சுகாதார அமைச்சகம் ‘ஆபத்தில் உள்ள நாடுகளை’ பட்டியலிட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வரும் பயணிகளைச் சரிபார்க்க கூடுதல் நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. இந்தியா கூடுதல் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகள்: யுனைட்டட் கிங்டம் உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல்.

* புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ‘ஆபத்தில் உள்ள நாடுகள்’ என அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் (COVID-19 தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல்) , புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 சோதனையுடன் விமான நிலையத்திற்கு வருகைக்கு பிந்தைய கோவிட்-19 சோதனையையும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

* இதில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெறும் பயணிகளுக்கு, தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்களின் மாதிரிகள் முழு ஜீனோம் சீக்வென்சிங்கிற்காக சேகரிக்கப்படும்.

* நெகட்டிவ் ரிசல்ட்டை பெறும் பயணிகள் 7 நாட்களுக்கு வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, இந்தியா வந்த 8-வது நாளில் மீண்டும் டெஸ்ட் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 7 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

* ‘ஆபத்து பிரிவில்’ இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 5% பேரும் சீரற்ற அடிப்படையில் கட்டாய சோதிக்கப்படுவார்கள்.

இந்தியாவிற்கு சர்வதேச வருகையாளர்களுக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.