பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய கல்வி அமைச்சு.

சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.