‘மரைக்காயர்’ எப்படி இருக்கிறது முழு விமர்சனம்.
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக பிரமாண்டமாக 100 கோடி செலவில் உருவாகி உள்ள படம் மரைக்காயர். இந்த படத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால், சுனில் ஷெட்டி, சுஹாசினி, அசோக் செல்வன், ஹரீஸ் பீராடி, நெடுமுடி வேணு உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்திய கடற்படையில் முதன் முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கிய குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மரைக்காயர். இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ராகுல் ராஜ், அங்கிட் சுரி, லயேல் ஈவன்ஸ், ரோனி ராபல் ஆகியோர் இசை அமைத்துள்ளார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி உள்ள மரைக்காயர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆண்ட சமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம். படத்தில் முகமதலி குஞ்ஞாலி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து இருக்கிறார். படத்தில் சமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தன் தந்தையை இழந்த மோகன்லால் பணக்காரர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் ராபின்ஹூட் போல வாழ்ந்து வருகிறார்.
அப்போது நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் வீரம், தீரம் பொருந்திய கொள்ளைக்காரன் மோகன்லாலுக்கு கடற்படைத் தளபதியாக பதவி கொடுக்கப்படுகிறது. பின் மோகன்லால் போர்ச்சுகீசியர்களிடம் மோதி அவர்களை தோற்கடிக்கிறார். இதனால் அரசவையில் மோகன்லால் உடைய மதிப்பு உயர்கிறது. இந்த சமயத்தில் மோகன்லாலுக்கு நெருக்கமான தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டு எல்லா சமன்பாடுகளையும் மாற்றி விடுகிறது.
இதற்கு பிறகு என்ன நடக்கிறது? கடற்படையை மோகன்லால் எப்படி விரிவுபடுத்தினார்? இதனால் அவர் என்னென்ன விளைவுகளை சந்தித்தார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் காட்டப்படும் பிரம்மாண்டமான காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது. படம் முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டது. முதல் பாதி மோகன்லாலின் மாஸ் என்ட்ரி வேற லெவல் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் படம் கொஞ்சம் போராடித்தான் வெற்றியடைய வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
மோகன்லால், பிரபு, கீர்த்தி சுரேஷ் என நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இதெல்லாம் படத்தின் வெற்றிக்கு போதாத ஒன்று. மேலும், உண்மையான வரலாற்றிலிருந்து கொஞ்சம் மாத்தி இயக்கியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி கொஞ்சம் சோர்வடைய வைக்கும் வகையில் இருந்தாலும் இறுதியில் படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விளையாட்டுத்தனமான இளைஞனாக இருந்து கொல்லைகாரனாக மாறி கடற்படை தளபதியாக மோகன்லால் உருவெடுத்திருக்கிறார்.
இதனால் கதை எங்கேயோ சென்று எங்கேயோ வந்திருப்பதுபோல் கூறப்படுகிறது. படத்தில் நிறைய பெரிய நடிகர்கள் எல்லாம் நடித்து இருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் கிடைத்திருப்பதால் அவர்கள் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் யாருடைய கதாபாத்திரம் எந்த ஆழத்திற்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. மேலும், படத்தில் கீர்த்தி சுரேஷின் காதல் காட்சிகள் எல்லாம் எந்த ஒரு கெமிஸ்ட்ரியும் இல்லாமல் ஏதோ காதல் காட்சிகள் காட்ட வேண்டும் என்பதற்கு என்றே இயக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் உற்சாகமும் விறுவிறுப்பும் இல்லாததால் படம் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
வரலாற்று கதையைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையும், சண்டை காட்சியும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
பிரம்மாண்டமான காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைத்திருக்கிறது.
திரைக்கதையில் விறுவிறுப்பு உற்சாகமும் இல்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் சலிப்பு தட்டி இருக்கிறது.
நிறைய நடிகர்கள் நடித்திருப்பதால் யாருடைய கதாபாத்திரம் என்ன முக்கியத்துவம் என்று தெரியாத அளவிற்கு கதை சென்று கொண்டிருக்கின்றது.
கதை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை மெதுவாக நகர்ந்து செல்வது போல் இருக்கிறது.
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த மரக்காயர் படம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றம் என்று சொல்லலாம். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மொத்தத்தில் மரைக்காயர்– நம்மை வரலாற்றுக்கு எடுத்துச் சென்றது.