லிட்ரோ காஸ் வெடிப்புக்கு முக்கிய காரணம்?
புரொபேன் மற்றும் பியூட்டேன் கலவை அளவை மாற்றியதே லிட்ரோ வாயு பாவிக்கும் இடங்களில் வெடிப்புகள் ஏற்படக் காரணம் என பெயர் வெளியிட விரும்பாத லிட்ரோ காஸ் நிறுவனத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு அடுப்புக்கு பாயும் வாயுவின் அதிவேகமே வெடிப்புக்கு முக்கிய காரணம்
நிபுணத்துவ ஆலோசனைகள் இருந்தபோதிலும் எரிவாயு உற்பத்தியில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் கலவையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு அடுப்புக்கு ஒரு அங்குலத்திற்கு 65 பவுண்டுகள் அழுத்தத்தில் எரிவாயு பாய்ந்தது.
ஆனால் கலவையை மாற்றிய பிறகு, எரிவாயு சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு ஒரு அங்குலத்திற்கு 105 பவுண்டுகள் வரை அழுத்தத்தில் பாயத் தொடங்குகிறது.
அந்த உயர் அழுத்தத்தை எரிவாயு குழாய் மற்றும் அடுப்பு தாங்க முடியாமல் எரிவாயு குழாய் மற்றும் அடுப்பு வெடிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவே இல்லை, என்றார்.