மக்கள் சக்தி கட்சி, பாராளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு
சண்டித்தனமான நாடாளுமன்ற முறை ,ஜனநாயகம் மேம்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரையில் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளது.
இன்று பகல் மணுஷ நானாயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர இருவரிடையே நிகழ்ந்த சூடான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னர் , அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்து மனுஷ நானாயக்காரவை தாக்க முயற்சி செய்ய முயற்சித்தது.
பாராளுமன்ற சரித்திரத்தில் முதல் முறையாக , அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது பகுதிக்கு அருகில் வந்து பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முயன்ற சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
உடனடியாக மனுஷ நானாயக்கார, பாதுகாப்பு கருதி சபாநாயகரது நுழைவாயில் வழியாக வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு உடனடியாகக் கூடி , இனிமேல் நடக்கும் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளாது பாராளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவிர இன்னும் சில முடிவுகளோடு அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் இறங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.