பூவரசங்குள பகுதியில் 50மில்லியன் செலவில் ஏற்று நீர்ப்பாசன திட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா நிதி உதவியில் மாந்தை கிழக்கு பூவசரங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை வடமாகாணஆளுனர் ஜீவன் தியாகராயா அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
145 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 145 ஏக்கர் விவசாய நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் பூவரசங்குளத்தில் இருக்கும் நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றும் செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.
வவுனிக்குளத்தின் ஒரு வாய்க்காலிருந்து வரும் தண்ணீர் 14 கிலோமீற்றர் தூரம் வந்து பூவசரங்குளத்தினை அடைகின்றது. இந்த பகுதி விவசாயிகளின் நன்மை கருதி விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இது அமைக்கப்பெற்றுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினையினை ஆகிய இரு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பகுதி விவசாயிகள் தைமாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரையிலான காலப்பகுதியில் மிளகாய் செய்கையும், ஐப்பசி தொடக்கம் தை வரையான காலப்பகுதியில் நிலக்கடலை செய்கையினை விசாயிகள் மேற்கொள்வார்கள்.
இந்த பூவரசங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை ஆளுனர் ஊடாக பிரதேசத்தின் விவசாய சம்மேளத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயளாலர் சமன் பந்துலசேன, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நவீனமயமாக்கல் செயத்திட்டதிட்ட பிரதி திட்ட பணிப்பாளர் கே.பத்மநாதன், வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் வீ.பிறேம்குமார், மாகாண பிரதி பிரதமசெயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர்கள், தவிசாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.