கொழும்பில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!
கொழும்பு, பழைய சோனகத் தெருவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
‘கெசல்வத்த பவாஸ்’ என்றழைக்கப்படும் இளைஞரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழு, குறித்த இளைஞரை வாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெசல்வத்த பவாஸ் போதை பொருள் வழக்கொன்றிற்காக தடுப்பு காவலில் இருந்து , அண்மையில் பிணையில் வீடு திரும்பியிருந்தார்.