இங்கிலாந்தில் ஒமைக்ரான் அதிவேக பரவல்.
இங்கிலாந்து உள்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. இதனால், தென்னாப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.
அந்நாட்டில், இதுவரை 160 பேர் ஒமைக்ரானுக்கு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு மிக தீவிரமுடன் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.