இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் நோயாளி மதநம்பிக்கை காரணமாக தடுப்பூசி செலுத்தவில்லை.

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் நோயாளி மதநம்பிக்கை காரணமாக தடுப்பூசி செலுத்தவில்லை- நைஜீரீயா சென்று வந்தவர் ஓமிக்ரோன் நோயாளி என இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பெண்ணிண் குடும்பத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என உபுல்ரோகண தெரிவித்துள்ளது.
நோயாளியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவலை அடிப்படையாக வைத்து பாதிக்கப்பட்டுள்ள பெண்ணையும் கணவரையும் கண்டுபிடிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் முயன்றவேளை அவர்கள் அருகில் உள்ள வீட்டில் மறைந்திருந்தனர் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்