ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காரால் மோதிய மியன்மார் படையினர் : ஐவர் பலி

மியன்மாரின் யன்கொன் நகரில் சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இராணுவத்தினர் காரால் மோதியதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் 15பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களை மோதித்தள்ளும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வீதியில் உடல்கள் காணப்படும் படங்களும் வெளியாகியுள்ளன.
யன்கொன் நகரில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களில் இராணுவத்தினர் காரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மோதினார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் தாக்கப்பட்டு டிரக் ஒன்றின் முன்னால் விழுந்தேன் ,படைவீரர் ஒருவர் என்னை துப்பாக்கியால் தாக்கினார் நான் அவரை தள்ளிவிட்டுவிட்டு என்னை பாதுகாத்தேன் அவர் உடனடியாக என்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் நான் அங்கிருந்து ஒடி தப்பினேன் என சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
படையினர் காணப்பட்ட கார் ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பின்பக்கமாக மோதியது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.