விளையாட்டுத்துறையில் புதியதோர் மாற்றம்….

விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் இழந்தவர்களுக்கு இதனூடாக விசேட வாய்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (06) தேசிய விளையாட்டு சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஒரு அணியை ஒவ்வொரு விளையாட்டிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.