பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடற்பாகங்கள் நாட்டை வந்தடைந்தது
பாகிஸ்தானின் சியல்கோட்டில் (Sialkot) சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் அடங்கிய பூதவுடல் லாகூரில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் UL186 ஊடாக நேற்று (06) மாலை நாட்டை வந்தடைந்தது.
பிரியந்தவின் உடலை தாங்கிய ஸ்ரீலங்கன் விமானம், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு புறப்பட்டது.
கடந்த வாரம் சியால்கோட்டில் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கை தொழிற்சாலை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அடங்கிய கும்பல், தொழிற்சாலையின் பொறியியலாளராக இருந்த பிரியந்த குமார, தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவரது உடலை தாக்குதல் கும்பல் எரியூட்டினர். இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தில் 900 நபர்கள் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் பிரேத பரிசோதனை சியால்கோட்டின் அராமா இகுபால் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவரது உடல் 1122 ஆம்பியூலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் லாகூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந் நிலையில் இன்றைய தினம் உடல் ஆம்பியூலன்ஸ் மூலமாக லாகூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பஞ்சாப் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் ஆலம் அகஸ்டின் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் அரச மரியாதையுடன் பிரியந்த குமாரவின் உடலை ஏற்றினார். சமய நல்லிணக்கம் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி, இலங்கையின் தூதுவர் யாசின் ஜோயா மற்றும் பஞ்சாப் உள்துறை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
49 வயதான பிரியந்த குமாரவின் கொலை குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 131 நபர்களை இதுவரை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். இந்த 131 பேரில் 26 நபர்கள் கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து , கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்பட்டது.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் பிரியந்த குமார தியவடனவின் உடல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரியந்தவின் சொந்தமான ஊரான கனேமுல்ல பகுதிக்கு உடலை கொண்டு செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பிரியந்தவின் இறுதி கிரியைகளை 8ம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் உடலை குறுகிய காலத்திற்குள் தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையம் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு நியாயம் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் அரச அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானில் பிரியந்தவின் தொழில் வழங்குநர் ஆகியோருடன், இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு விரைவில் பாகிஸ்தானிடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் தூதுவர் உயிரிழந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “உடலை பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க முடிவு செய்துள்ளது.
மேலும், நமது பிரதமர், ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த மரணத்திற்கு காரணமான ஏராளமானோர் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு ஜயரத்ன மலர் மண்டபத்தில் இறுதி ஊர்வலம் மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரியந்த குமார தியவடனவை துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதானமான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்தியாஸ் அலியா பில்லி என்ற பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராவல்பிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
پولیس نے انتہائی مطلوب ملزم امتیاز عرف بلی کو بھی گرفتار کر لیا ہے سری لنکن شہری پر تشدد کرنے اور نعش کی بے حرمتی کرنے میں شامل تھا ملزم کی گرفتاری کے لیے متعدد مقامات پر چھاپے مارے مگر وہ ہر بار اپنا ٹھکانہ تبدیل کرلیتا,ملزم کو راولپنڈی جانے والی بس سے گرفتار کیا گیا#Sialkot https://t.co/pePiN586xQ pic.twitter.com/nYXuwq3fld
— Punjab Police Official (@OfficialDPRPP) December 6, 2021
வீடியோ:-