300 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக முதல் மூன்று நாட்களில் பல மணி நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 4வது நாளில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் முகமது ரிஸ்வான் 53 ரன்களும் , அசார் அலி 56 ரங்களும் குவித்தனர்.ம் ஈ
இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய வங்காளதேச அணியின் வீரர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு இடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். தற்போது வரை வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.