செயலியில் புது வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியில் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி புகைப்படம், வீடியோக்கள் என பலத்தரப்பட்ட தகவல்கள் அன்றாடம் பகிரப்பட்டு வருகின்றன.
பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் பணியை வாட்ஸ்அப் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் அழிந்துவிடும்படி தேர்வு செய்ய முடியும்.
இதற்கான காலக்கெடு 24 மணி நேரம் அல்லது 7 நாட்கள், 90 நாட்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் விரும்பும் காலக்கெடுவை தேர்வு செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் அனுப்பும் தகவல்கள் 7 நாட்களுக்கு பின் அழிந்து போகும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
இனி அப்படி இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் தகவல்கள் அழிந்துவிடும்படி காலக்கெடுவை தேர்வு செய்து கொள்ளலாம். முன்பு தகவல்கள் அழியும் காலக்கெடு 7 நாட்களாக இருந்தது.