கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ₹ 50,000 இழப்பீடு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு 50,000 ரூபாய் நிவரணம் வழங்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எப்படி விண்ணப்பிப்பது யாரெல்லாம் பெற முடியும். எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்வோம்.

கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையை ஆன்லைன் வாயிலாகவே எளிமையாக விண்ணப்பிப்து பெற முடியும். இதற்காக தமிழக அரசின் https://www.tn.gov.in/ வலைத்தளத்துக்கு முதலில் செல்ல வேண்டும். அதில் whats new என்ற பகுதியில் Ex Gratia for COVID 19 என்ற லிங்கை க்ளிக் செய்து அதில் தோன்றும் திரையில் உயிரிழந்தவர் மற்றும் இழப்பீடு தொகை கோருபவர் குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

கேட்கப்படும் விவரங்கள்:

உரிமை கோருபவரின் விவரங்கள்:

1. இறந்தவரின் வாரிசுதாரரின் பெயர்
2. இறந்தவருடனான வாரிசுதாரரின் உறவுமுறை
3. இறந்தவருடையை வாரிசுதாரரின் மின்னஞ்சல்
4. உரிமை கோருபவரின் முகவரி
5. மேற்கண்ட முகவரியில் வசிக்கும் ஆண்டுகள்

இறந்தவரின் அடிப்படை விவரங்கள்

1. இறந்தவரின் பெயர்
2. இறந்தவரின் தந்தை/தாயார்/கணவர்/மனைவி பெயர்
3. பாலினம்
4. இறந்தவரின் வயது
5. கோவிட் உறுதி செய்யப்பட்ட தேதி
6. இறந்த நாள் மற்றும் நேரம்
7. இறந்த இடம்
8. இறந்த மாநிலம்
9. இறந்த மாவட்டம்

சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் விவரங்கள்

1. இறந்தவருடைய வாரிசுதாரர்
2. வாரிசுதாரரின் பெயர்
3. உறவுமுறை
4. ஆதார் அல்லது ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும்
5. கைபேசி எண்
6. வங்கியின் பெயர்
7. வங்கிக் கணக்கு எண்
8. IFSC குறியீடு

இறந்தவரின் நிரந்தர முகவரி

தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி

சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி

இறந்த மருத்துவமனையின் முகவரி

மேற்கண்ட தகவல்களை விண்ணப்பதாரர்கள் உள்ளீடு செய்து இறுதியாக அதில் தோன்றும் வார்த்தை சரிபார்தலை மேற்கொண்டு பின்னர் ‘உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி கருணைத்தொகை ரூ.50,000ஐ வழங்குப்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற உறுதி ஆவணத்தை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேற்கண்ட முறையில் விண்ணப்பித்தவுடன் சரிபார்த்தலுக்கு பின்னர் இழப்பீடு தொகையை வங்கிக் கணக்கிலேயே பெற முடியும்.

Leave A Reply

Your email address will not be published.