தக்காளி விலை அயல் மாநிலங்களிலும் கிடுகிடு வென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது : இன்றைய விலை நிலவரம்

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. கேரளாவில் தக்காளி விலை கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் தக்காளி உற்பத்தி குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வாரத்தில் மழை குறைந்த நிலையில் தக்காளி விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று, தக்காளி சில்லரை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.

தக்காளி சில்லரை மார்க்கெட்டில் கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மலபார் மாகெட்டில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாக்கு விற்பனையாகிறது. இதனால் சில்லரை மார்கெட்டில் தக்காளி விலை 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 100 ரூபாய் விற்பனை செய்த போது கூட பரவாயில்லை தற்போது நிலை மிகவும் மோசமாக உள்ளது.

தமிழகத்திலும் நேற்று ராமநாதபுரம், நெல்லை, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் மொத்த விற்களையில் கிலோ 80 ரூபாயாகவும் சில்லரையில் கிலோ 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல கர்நாடக மாநிலத்திலும் தள்ளாளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மங்களூரு மற்றும் துமகுருவில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும், தார்வார்டில், மைசூரு, ஷிவமோகா, பெங்களூருவில் கிலோ 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. கனமழையால் விளைச்சல் குறைந்து வரத்தும் குறைந்துள்ளதால் இன்னும் சில தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை 1கிலோ 100 க்கும் சிறு மொத்த விற்பனை 120 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 120 முதல்140 ரூபாய் வரை மாற்றமின்றி விற்பனையாகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்று மொத்த 38 வாகனத்தில் 570 டன் தக்காளி வந்துள்ளது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் இன்று 2000 டன் வரத்து குறைந்து. 3000 டன் மட்டுமே வந்துள்ள நிலையில் அதன் விலையும் நேற்று விலையில் 60 லிருந்து 80 ரூபாய்க்கு கூடுதலாக இன்று விலை உயர்ந்த விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 8 நாட்கள் ஆனா நிலையில், விலை குறையாததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்றைய விலையில் இருந்து அத்தியாவசிய காய்கறிகளான
10 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதன்படி, உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 90, நாட்டுத் தக்காளி கிலோ 95,110 க்கும், வெங்காயம் 30 ,வெண்டைக்காய் 60 க்கும், கேரட் 50/70 க்கும், அவரைக்காய் 90 க்கும், முருங்கைக்காய் 150/270 க்கும், கருவேப்பிலை 1 கட்டு 40 க்கும், பீர்க்கன்க்காய் மற்றும் கோவைக்காய் 60 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.