பாகிஸ்தானில் நாளை விசேட கண்டன தினமாக பிரகடனம்.

பாகிஸ்தான் – சியால்கொட் பகுதியில் தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் நேற்று (08) பிற்பகல் கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை (10) விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கடிதம் ஒன்றை அனுப்பி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுத்த நடவடிக்கைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.