10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி….

கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,033,791 ஆக அதிகரித்திருப்பதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் பணி ஆரம்பமானது.
2 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் 3 மாதங்களை கடந்த நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பூசி முதலாவதாக, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் கடமைகளில் ஈடுப்பட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து நேற்று (08) கூடிய தொற்று நோய் தொடர்பான ஆலோசனை தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.