நாட்டை முடக்குவது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்.
நாட்டை முழுமையாக முடக்காமல் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளதாகக் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.