முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! – அரசுக்கு மரிக்கார் பகிரங்க சவால்.

“முடிந்தால் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றேன்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசுக்குத் தற்போது செயற்கையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்ற போதிலும் நாட்டுக்குள் இயற்கையில் அப்படியான பலம் இல்லை.
அத்துடன் அரசு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொண்ட கடனைப் பயன்படுத்தி மேற்கொண்ட தாமரைக் கோபுரம் போன்ற பலன் தராத செலவுகள் காரணமாக நாடு பெருளாதார ரீதியாக அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளது” – என்றார்.
பாராளுமன்றத்தில் மரிக்கார் எம்.பி. உரையாற்றும்போது ஆளும் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்ததன் காரணமாக சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.