எவ்வித காரணமும் இன்றி பணத்தை வைப்புச் செய்தால் வங்கி கணக்கு முடக்கம்.

எவ்வித காரணமும் இன்றி ஒருவர் மற்றுமொரு நபரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்தால், அது பற்றி தேடி அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பணச் சலவைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான வங்கிக் கணக்கை தடை செய்யும் அதிகாரமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருக்கின்றது எனவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கும் கப்ரால் விசேட அறிவிப்பை வழங்கியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக வங்கி சேவைகளை பயன்படுத்தி மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு பணத்தை அனுப்புமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தமாக தற்போது, மிக துல்லியமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியியின் ஆளுநர் கூறியுள்ளார்.