வேகமாகப் பரவாது ஒமைக்ரோன் திரிபு.
ஒமைக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தனது ருவிட்டர் தளத்தில் இதை அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“ஒமைக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாகப் பரவாது. ஒமைக்ரோன் கொரோனா வகை குறித்து தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், பூஸ்டர் தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த வைரஸ் மாறுபாடு பற்றி ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான தரவுகளைப் படிக்க அதிக நேரம் தேவைப்படுகின்றது” – என்றுள்ளது.